திருகோணமலையில் சுத்தமான குடிநீர் விநியோக திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் ஜீவன் (Photos)

Trincomalee Sri Lanka Sri Lankan Peoples Jeevan Thondaman
By Thirumal May 21, 2023 02:14 PM GMT
Report

திருகோணமலை பகுதியில் சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் புல்மோட்டை நிலாவெளி, சம்பல் தீவு மற்றும் ஆனந்த குளம் ஆகிய பகுதிகளை இணைக்கும் குடிநீர் விநியோகத்திற்கான குடிநீர் குழாய் பொருத்தும் நடவடிக்கையை நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டைமானால் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. 

67.3 மில்லியனுக்கும் அதிகமான நிதி உதவியின் ஊடாக மேற்கொள்ளப்படும் இத்திட்டம் 28 கிலோ மீற்றர் பரப்பைக் கொண்டதாகும்.

இந்த திட்டம் நிறைவடைந்தவுடன் 300ற்கும் அதிகமான புதிய குடிநீர் இணைப்புகள் வழங்கப்படுவதுடன், திருகோணமலை நகரம் மற்றும் அதை அண்டியுள்ள கிராமப் பகுதிகளுக்குத் தடையின்றி குடிநீர் வழங்குவதற்காகவே இத்திட்டம் மேற்கொள்ளப்படுகின்றது.

இதேவேளை, திருகோணமலை, கந்தளாய் ஆகிய நகரங்கள் மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்குக் குடிநீர் வழங்கும் கந்தளாய் நீர் சுத்திகரிப்பு நிலையத்தை விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருகோணமலையில் சுத்தமான குடிநீர் விநியோக திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் ஜீவன் (Photos) | Clean Drinking Water In Trincomalee Region

தற்போதைய நிலவரம்

கிழக்கு மாகாணத்துக்கு கண்காணிப்பு பயணமொன்றை மேற்கொண்டிருந்த அமைச்சர் ஜீவன் தொண்டைமான், கந்தளாய் நீர் சுத்திகரிப்பு நிலையத்தை பார்வையிட்டதுடன், அதிகாரிகளுடனும் கலந்துரையாடியுள்ளார்.

தற்போதைய நிலவரம் மற்றும் விஸ்தரிப்புக்கான தேவைப்பாடுகள் பற்றியும் கேட்டறிந்து கொண்டார்.

இந்நிகழ்வில் அமைச்சர் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்களான மருத பாண்டி ராமேஷ்வரன், கபில அத்துகோரல, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிரதி தலைவர் சஞ்சீவ விஜேகோன், தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் கிழக்கு மாகாணத்திற்கான பிரதி பொது முகாமையாளர் எம்.எம்.நசீல், உதவி பொது முகாமையாளர் டீ.ஏ.பிரகாஷ், பிராந்திய முகாமையாளர் பீ.சுதாகரன், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள் சாமி, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US