அரசியல் பேச வேண்டாம் என்றால் அரசியல்வாதிகள் புகைப்படங்கள் இங்கே எதற்கு..! ஆத்திரமடைந்த டேனிஸ் அலி
காலிமுகத்திடல் ஆர்ப்பாட்ட களத்தின் முன்னணி செயற்பாட்டாளர்கள் நேற்று பிற்பகல் கொழும்பு சிங்கள கலாச்சார மத்திய நிலையத்தில் ஊடக சந்திப்பொன்றை நடத்தியிருந்தனர்.
“கொழும்பை கைப்பற்றுவோம், மாற்றத்தை உண்டுபண்ணுவோம்” எனும் தொனிப்பொருளில் இந்த ஊடக சந்திப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது ஆர்ப்பாட்ட களத்தின் முன்னணி செயற்பாட்டாளர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துக் கொண்டிருக்கும் போது சிங்கள கலாச்சார மத்திய நிலையத்தின் நிர்வாகத்தினர் அந்த இடத்திற்கு வருகை தந்து ஊடக சந்திப்பை தொடர விடாது குறித்த ஊடக சந்திப்பை நிறுத்துமாறு கூறியுள்ளனர்.
வாக்குவாதத்தால் ஏற்பட்ட அமைதியின்மை
இதையடுத்து நிர்வாகத்தினருக்கும், ஆர்ப்பாட்ட களத்தின் முன்னணி செயற்பாட்டாளர்களுக்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்று அங்கு அமைதியின்மை நிலவியுள்ளது.
கலாச்சார மத்திய நிலையத்தின் நிர்வாகத்தினர் அங்கு அரசியல் கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் எனவும், அந்த இடம் கலைத்துறையை வளர்ப்பதற்காக உள்ள இடம் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் ஆர்ப்பாட்ட களத்தின் முன்னணி செயற்பாட்டாளர்களில் ஒருவரான டேனிஸ் அலி அங்கிருந்த அரசியல்வாதிகளின் புகைப்படங்களை காண்பித்து கலைத்துறையை வளர்ப்பதற்கென்றால் இந்த அரசியல்வாதிகளின் புகைப்படங்கள் இங்கே எதற்கு என கேட்டு அவற்றை அகற்றுமாறு தெரிவித்துள்ளார்.

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
