அம்பாறையில் இரண்டு அரசியல் கட்சிகளுக்கிடையில் மோதல்
அம்பாறை மாவட்ட சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாய்க்குட்டியர் சந்தி அருகில் இரண்டு அரசியல் கட்சிகளுக்கிடையே மோதல் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் நேற்றையதினம்(14.04.2025) இடம்பெற்றுள்ளது.
முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் வருகை தந்து சென்ற பின்னர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் உட்பட ஆதரவாளர்களால் வீரமுனை வட்டார வேட்பாளர் ஏ.சி.எம்.சஹீல் உட்பட அவரது ஆதரவாளர்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தல்
இதன்போது, காயமடைந்த தேசிய காங்கிரஸின் வீரமுனை வட்டார வேட்பாளர் ஏ.சி.எம்.சஹீலை சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் செய்த தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாஹ் பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் தற்போது சூடுபிடித்துள்ள நிலையில், இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






குணசேகரன் மற்றும் அவரது அம்மா திட்டத்தை தெரிந்துகொண்ட ஜனனி.. எதிர்நீச்சல் சீரியல் அடுத்த அதிரடி புரொமோ Cineulagam

viral video: கலிபோர்னியாவை உலுக்கிய நிலநடுக்கம்... குட்டிகளை காப்பாற்ற யானைகள் செய்த நெகிழ்ச்சி செயல் Manithan

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் வில்லனாக நடிக்கவிருந்தது இவர் தான்.. யார் தெரியுமா Cineulagam
