இரு குழுக்களுக்கு இடையே மோதல்: ஆறு பேர் வைத்தியசாலையில் அனுமதி
திருகோணமலை - மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரொட்டவெவ பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின் காரணமாக பெண்ணொருவர் உட்பட ஆறு பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இத் தாக்குதல் சம்பவம் (24.1.2024) இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் 28 தொடக்கம் 58 வயதுக்கு இடைப்பட்ட நபர்களே காயமடைந்துள்ளனர்.
இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு
சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, மிரிஸ்வெவ பகுதியில் மேற்கொள்ளப்பட்டிருந்த சேனைப்பயிர்ச் செய்கைக்குள் மாடுகள் புகுந்து நாசமாக்கியுள்ளதாக சேனைப்பயிர் செய்கையாளர் மாட்டின் உரிமையாளரிடம் நட்ட ஈடு கோரியபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில் இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் பெண் ஒருவர் உட்பட ஆறுபேர் காயமடைந்த நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் பெண் ஒருவருடன் வயோதிபர் ஒருவரும் மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan
