யாழில் இரு குழுக்களுக்கிடையே மோதல் : இருவர் பொலிஸாரால் கைது
யாழ்ப்பாணம் (Jaffna) வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று வடக்கில் நேற்று (17) இரவு இரு குழுக்களுக்கிடையே கைகலப்பு சம்பவம் இடம்பெற்றதில் முன்னாள் உள்ளூராட்சி சபை தேர்தல் வேட்பாளர் ஒருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார் ஆலய திருவிழாவுக்கான கொடியேற்ற நிகழ்வு நேற்று (17) இடம்பெற்றுள்ளது.
பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி
கொடியேற்ற நிகழ்வின் பின் நள்ளிரவு ஆலய வெளிப்புற வளாகத்தில் நின்றிருந்தவர்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் திடீர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதால் இரு பகுதியினருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
கைகலப்பில் பலத்த காயமடைந்த பருத்தித்துறை பிரதேச சபைக்கான தேர்தலில் நாகர்கோவில் வட்டாரத்தில் போட்டியிட்ட வேட்பாளர் பலத்த காயங்களுடன் பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் மருதங்கேணி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் காயங்களுக்குள்ளான முன்னாள் வேட்பாளர் அதிக மதுபானம் அருந்தியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் இடம்பெற்ற ஆலய வெளிப்புற சூழலில் அதிக மதுபான போத்தல்கள் உடைந்த நிலையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உக்ரைன் உடைந்து சின்னாபின்னமாகும்... இந்த இரண்டு நாடுகளும் உலகை ஆளும்: எச்சரிக்கும் வாழும் நோஸ்ட்ராடாமஸ் News Lankasri
