இரு மாணவர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட கடும் மோதல்! ஐவருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
பண்டாரவளை பிரதேசத்தில் உள்ள இரு பாடசாலைகளின் மாணவர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 5 பாடசாலை மாணவர்களும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பாடசாலை மாணவர்கள் ஐவர் இன்று (23.05.2023) காலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதுடன் இன்று மாலை பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையிலே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஐந்து பாடசாலை மாணவர்கள்
ஐந்து பாடசாலை மாணவர்களும் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமை 9 மற்றும் 12 க்கு இடையில் பண்டாரவளை பொலிஸில் முன்னிலையாகுமாறு பண்டாரவளை பதில் நீதவான் கெனத் டி சில்வா உத்தரவிட்டுள்ளார்.
இந்த தாக்குதல் தொடர்பான காணொளிகள் சமூக வலைதளங்களிலும், மின்னணு ஊடகங்களிலும் பரவியதையடுத்து, அது குறித்து பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.
பொலிஸார் விசாரணை
பின்னர், சம்பவம் தொடர்பில் பண்டாரவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதை அடுத்து மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இரு மாணவர்களை கொடூரமாக தாக்கி கூரிய ஆயுதத்தால் காயப்படுத்த முயன்ற மூன்று பாடசாலை மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அதுமட்டுமின்றி, அந்த இடத்தில் சண்டையிட்ட மேலும் இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri

Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan
