நண்பர்களுக்கிடையில் கடும் மோதல்: கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை
கம்பஹா - அஸ்கிரிய பிரதேசத்தில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக கம்பஹா தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் துல்கின் அனுராத நவரத்ன என்ற 33 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்தவரும், கொலை செய்தவரும் நண்பர்கள் எனவும், இருவருக்குமிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தினால் கொலை இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸார் விசாரணை
கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக கூறப்படும் சந்தேகநபர் உயிரிழந்தவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் கம்பஹா, பொக்குண வீதி பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நேபாளத்தில் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு: அடித்து செல்லப்பட்ட 35 வீடுகள் மற்றும் பாலங்கள் News Lankasri
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan