ஆடையகத்தில் சற்றுமுன் பாரிய தீப்பரவல் : வெள்ளவத்தையில் பரபரப்பு
கொழும்பு - வெள்ளவத்தையிலுள்ள ஆடையகத்தில் சற்றுமுன் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் பிரபல ஆடை நிறுவனமான (NOLIMIT) நிறுவனத்தின் வெள்ளவத்தை கிளையில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தின்போது ஆடையகத்திலிருந்த பொதுமக்கள் உட்பட பணியாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதன்போது சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் தீயை அணைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலத்திரனியல் கோளாறு காரணமாகவே இந்த திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
2014 ஆண்டு NOLIMIT நிறுவனத்தின் பாணந்துறை கிளையும் தீ விபத்தினால் முற்றாக சேதமடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan

மாட்டப்போகும் ஆனந்தி.. வில்லி கைக்கு போகும் ஸ்கேன் ரிப்போர்ட்! சிங்கப்பெண்ணே இன்றைய ப்ரோமோ Cineulagam

வெளிநாட்டவர்களில் சிலரது பாஸ்போர்ட்களை ரத்து செய்யும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள்: ஜேர்மனி திட்டம் News Lankasri
