கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடும் மோதலினால் குழப்ப நிலை
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சிறு ஊழியர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலினால் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்துடன், மற்றுமொரு வைத்தியசாலை சிற்றூழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று பிற்பகல் இலங்கை சுதந்திர பணியாளர்கள் சங்கம் மற்றும் தேசிய ஊழியர் சங்கத்தின் தொழிற்சங்க உறுப்பினர்கள் இருவரும் தேசிய வைத்தியசாலையில் சங்க உறுப்பினர்கள் மீது கற்களால் தாக்கியுள்ளனர்.
இதன்போது ஏனைய வைத்தியசாலைகளின் சிறு ஊழியர்களும் வைத்தியசாலைக்குள் பிரவேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெளியிட வைத்தியசாலையில் இருந்து வந்த வைத்தியசாலை பணியாளர்கள் வைத்தியசாலை பணிப்பெண்களை கடுமையான வார்த்தைகளால் திட்டியதே மோதலுக்கு காரணமாகும்.
இதன்போது வைத்தியசாலையின் சிற்றூழியர் ஒருவர் வைத்தியசாலையின் மற்றுமொரு சிற்றூழியர் மீது தாக்கியுள்ளார். காயமடைந்தவர்களில் ஒருவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் மற்றைய நபர் மருதானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வீட்டைவிட்டு வெளியே போக சொன்ன பார்வதி, கண்ணீர்விட்டு அழுத விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
திறப்பு விழாவில் பெரிய பிரச்சனை.. போட்டுக்கொடுத்த ஞானம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan