எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் நஷ்ட ஈட்டைப் பெற்றுக் கொள்வதற்கு துரிதமாக செயற்படுங்கள்:விஜேயதாச ராஜபக்ச- செய்திகளின் தொகுப்பு
எம்.வி. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்தினால் ஏற்பட்ட சேதம் தொடர்பான சட்ட ரீதியான நடவடிக்கைகள் மற்றும் நஷ்ட ஈட்டைப் பெற்றுக் கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேயதாச ராஜபக்ச அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
எம்.வி. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்து தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று நேற்று அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தலைமையில் , சட்டமா அதிபர் சஞ்சய ராஜரத்னம் உள்ளிட்டோரது பங்குபற்றலுடன் இடம்பெற்றது.
இதன் போதே அமைச்சர் மேற்கண்டவாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இவ் விசேட கலந்துரையாடலில் எம்.வி. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்தினால் நாட்டுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கள் மற்றும் சேதங்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள சட்ட ரீதியான நடவடிக்கைகள், நஷ்ட ஈடு வழங்கப்பட்டுள்ள முறைமை மற்றும் குறித்த நிறுவனங்கள் தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்தல் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,