இறக்காமம் பிரதேசத்தில் சீமெந்து லொறியை முற்றுகையிட்ட பொது மக்கள்
அம்பாறை மாவட்டம், இறக்காமம் பிரதேசத்தில் சீமெந்து ஏற்றி வந்த லொறி ஒன்றினை பொதுமக்கள் முற்றுகையிட்டுள்ளனர்.
இறக்காமத்தில் உள்ள ஒரு சில கடைகளில் சீமெந்து விலை 1650 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதினால் குறித்த கடைகளின் விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட சீமெந்து லொறியை இவ்வாறு பொது மக்கள் வழிமறித்து முற்றுகையிட்டுள்ளனர்.
இதனையறிந்து குறித்த இடத்திற்கு இறக்காமம் பொலிஸ் பொறுப்பதிகாரி எம்.ஐ.ஜெளபர் மற்றும் முன்னாள் பிரதேச சபை தவிசாளர் ஜே.கலீலுர் ரஹ்மான் (J.Khalilur Rahman) ஆகியோர் தலையீடு செய்து குறித்த சீமெந்து பக்கட்டின் விலையை பேச்சுவார்த்தையின் அடிப்படையில் 1300 ரூபாய் வீதம் பொதுமக்களுக்கு அவ்விடத்திலே பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் பல பாகங்களில் சீமேந்தின் விலை அதிகரித்து குறைந்த நிலையில் ஒரு சில கடைகளில் வியாபாரிகள் சீமெந்தினை பதுக்கியதன் காரணமாக பொதுமக்கள் இவ்வாறு பல இடங்களில் சீமேந்து தேடி திண்டாடி வருகின்றதும் குறிப்பிடத்தக்கது.






பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri

இந்த ராசியினர் மருமகளை மகளாகவே நடத்தும் தலைசிறந்த மாமியாராக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
