நாட்டில் மீண்டும் சிவில் போர் ஏற்படலாம் வஜிர எச்சரிக்கை
நாட்டில் மீண்டும் சிவில் போர் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன (Vajira Abeywardena) தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவில் இன்று (29) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் கொள்கைகள்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மரபு ரீதியான அரசியல் கொள்கைகளைப் பின்பற்றினால் நாட்டில் மீண்டும் சிவில் போர் ஏற்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவ்வாறான நிலைமை ஏற்பட்டால் அதன் பொறுப்பினை தொடர்புடைய தரப்பினர் ஏற்றுக்கொள்ள வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் நாட்டுக்கு மிகவும் தீர்மானம் மிக்க ஓர் தேர்தலாகும் என அவர் கூறியுள்ளார்.
நாட்டில் சிவில் போராட்டம் ஏற்படக்கூடிய வகையில் வாக்களிப்பதா அல்லது சிவில் போராட்டங்களை தடுக்கும் வகையில் வாக்களிப்பதா என்பதனை மக்கள் தீர்மானிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |