திருகோணமலை அரச ஊழியர் ஒருவரின் முகம் சுழிக்கவைக்கும் செயல்
திருகோணமலை-தொவனிபியவர பகுதியில் ஒன்பது வயது சிறுமிக்கு தனது அந்தரங்க உறுப்பை காட்டிய குற்றச்சாட்டின் பேரில் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கைது சம்பவம் நேற்று (29) இடம்பெற்றுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மஹதிவுல்வெவ -தெவனிபியவர பகுதியில் வசித்து வரும் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்றில் முன்னிலை
கடந்த 27 ஆம் திகதி சிறுமி தனியாக வீட்டில் இருந்த போது குறித்த நபர் அந்தரங்க உறுப்பை காட்டியதாக தாயாரிடம் கூறியதையடுத்து தாயார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து சந்தேகநபர், சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவின் பொறுப்பதிகாரி ரஞ்சனி உள்ளிட்ட அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை திருகோணமலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |