சாவகச்சேரி சந்தைப் பகுதிக்கு விஜயம் செய்த நகரசபை குழுவினர்!
யாழ்.சாவகச்சேரி நகராட்சி மன்ற நிர்வகிப்புக்குள்ள நவீன சந்தை கட்டடத்தொகுதி மற்றும் மரக்கறி,பழச்சந்தை தொகுதிகளை தவிசாளர், உபதவிசாளர் மற்றும் உறுப்பினர்கள், நகரசபையின் பொது சுகாதார பரிசோதகர் நேற்று (07) காலை நேரில் சென்று நிலமைகளை ஆராய்ந்தனர்.
சந்தை தொகுதியில் உள்ள விற்பனை நிலையங்களை ஒழுங்கமைத்து வியாபாரிகளுக்கும் நுகர்வோருக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு சந்தைதொகுதியை புணரமைத்தல் மற்றும் நடைபாதைகளை ஒழுங்குபடுத்தி நகரத்தை அழகுபடுத்துவதற்கான செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கும் தவிசாளரால் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
மேலும் சந்தை தொகுதியில் காணப்படும் தேவையற்ற பெயர்பலகைகள், பொருட்கள் மற்றும் கழிவுகளை உடனடியாக அகற்றுமாறு சந்தை காப்பாளருக்கு உப தவிசாளர் அறிவுறுத்தல் வழங்கினார்.







