அரச ஊழியர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள விசேட சுற்றறிக்கை
சமூக ஊடகங்களில் கருத்து தெரிவிப்பதற்கான கட்டுப்பாடுகள் குறித்து பொது நிர்வாக அமைச்சு அதிகாரிகளுக்கு விசேட சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
இதன்படி, சட்டத்தை பின்பற்றாமல் அரச அதிகாரிகள் சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளியிடுவது ஒழுக்காற்று நடவடிக்கைக்கு வழிவகுக்கும் குற்றமாக அமையும் என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் மாயாதுன்னே தெரிவித்துள்ளார்.
அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னேவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில்,
ஸ்தாபனக் குறியீட்டின் பிரிவுகளின் 6 மற்றும் 7ஆம் அத்தியாயங்களின் விதிகளைப் பின்பற்றாமல் சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளியிடும் பொது அதிகாரிகள் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan

ஆபரேஷன் சிந்தூர்... சுட்டு வீழ்த்தப்பட்ட ரஃபேல் விமானம்: உறுதி செய்த பிரெஞ்சு உளவுத்துறை News Lankasri
