உதய கம்மன்பில குறித்து புலனாய்வு பிரிவு விசாரணை
முன்னாள் அமைச்சரும் பிவித்துர ஹெல உறுமய கட்சியின் தலைவருமான உதய கம்மன்பில தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அண்மைய ஜெர்மனி விஜயம் தொடர்பில் வெளியிட்ட கருத்துக்கள் குறித்து இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கம்மன்பிலவின் கருத்துக்கள் குறித்து கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட உள்ளது.
ஜனாதிபதி அநுர, ஜெர்மனியில் வைத்து தமிழீழ விடுதலைப் புலி தலைவர்களை சந்தித்தார் என ஊடகங்களிடம் கூறியதாகவும் இந்த கூற்றுக்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் விரைவில் உதய கம்மன்பிலவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.




