பந்துல குணவர்தனவுக்கு குற்றப் புலனாய்வு திணைக்களம் அழைப்பு
சீனி வரி மோசடி தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக முன்னாள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவுக்கு குற்றப் புலனாய்வு திணைக்களம் அழைப்பு விடுத்துள்ளது.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இன்று (03) முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சீனிக்கு விதிக்கப்பட்டிருந்த விசேட வரி ஐம்பது ரூபாவில் இருந்து இருபது ரூபாவாக குறைக்கப்பட்டதன் மூலம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள வரி வருமான இழப்பு தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்யவுள்ளதாக நிதி மற்றும் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
பந்துல குணவர்தன
இதன்படி பந்துல குணவர்தன அன்றைய காலப்பகுதியில் வர்த்தக, மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சராக கடமையாற்றியிருந்தார்.
அது தொடர்பில் அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பிலேயே இவ்வாறு வாக்குமூலம் பதிவு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 13 மணி நேரம் முன்

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
