கம்மன்பிலவின் கைது! சிஐடியின் தீர்மானம்
முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவை கைது செய்வது தொடர்பில் இன்னும் எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என குற்றப் புலனாய்வுத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
உதய கம்மன்பில தாக்கல் செய்த ரிட் மனு தொடர்பான விசாரணை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்றையதினம்(12.09.2025) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த விடயம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் துறை சார்பில் முன்னிலையாகியிருந்த துணை சொலிசிட்டர் ஜெனரல் சுதர்ஷன டி சில்வா இந்த சமர்ப்பணங்களை வழங்கியுள்ளார்.
ICCPR சட்டம்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில சமீபத்தில் ஊடகங்களுக்கு அளித்த கருத்து இனங்களுக்கிடையே முறுகலை ஏற்படுத்தலாம் என குறித்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.
கம்மன்பிலவின் கருத்துக்கள் 2007 ஆம் ஆண்டின் 56ஆம் இலக்க சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான உடன்படிக்கை(ICCPR) சட்டத்தின் பிரிவு 3(1) மற்றும் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 120இன் கீழ் குற்றமாக உள்ளதா என்பதைத் தீர்மானிக்க இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, உதய கம்மன்பில, தற்போது தாய்லாந்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




