உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை தவறாக வழிநடத்திய பொலிஸ் அதிகாரி கைது
2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை தவறாக வழிநடத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் நேற்றையதினம் (08) இரவு குற்றப் புலனாய்வுத் துறையின் சிறப்புக் காவல் குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதிகாரி ஒருவர் கைது
2018 நவம்பரில் மட்டக்களப்பு வவுனதீவு பகுதியில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு இடையூறு விளைவித்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்த சந்தேக நபர் புலனாய்வு சேவையின் கரடியனாறு மாவட்ட புலனாய்வுப் பிரிவில் பணியாற்றியதாகக் கூறப்படுகிறது.
வவுணதீவு கொலையின் உண்மையான குற்றவாளிகள் வெளிப்படுவதைத் தடுத்ததாகவும், அதன் மூலம் அந்தக் குற்றவாளிகள் ஈஸ்டர் தாக்குதல்கள் உள்ளிட்ட குற்றங்களைச் செய்ய வாய்ப்பளித்ததாகவும் சந்தேக நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.