கஞ்சிபானை இம்ரானின் விருந்தில் சிஐடி அதிகாரி: மறுக்கப்படும் குற்றச்சாட்டு
கிளப் வசந்தவின் கொலையின் பின்னர் கஞ்சிபானை இம்ரான் இத்தாலியில் நடத்திய விருந்தில், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் பணியாற்றிய முன்னாள் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் இருப்பதாக வார இறுதி நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் பணிப்புரிந்து தற்போது பிரான்ஸில் வசித்து வரும் துமிந்த ஜயதிலக்க என்ற அதிகாரி மீதே இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது.
எனினும், துமிந்த ஜயதிலக்க இந்த செய்தி தொடர்பில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களை மறுத்துள்ளார்.
கஞ்சிபானை இம்ரானை கைது
பிரான்ஸில் இருந்து இணையத்தளமொன்றிற்கு வழங்கிய நேர்காணலிலேயே இதனை கூறியுள்ளார்.
மேலும், இந்த செய்தியை வெளியிட்ட ஊடகவியலாளரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்ததாகவும், ஆனால் அவர் தனது தொலைபேசி அழைப்புக்களை புறக்கணித்ததாகவும் கூறியுள்ளார்.
கிளப் வசந்தவை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் மற்றும் துலானின் தாயார் பற்றிய சமீபத்திய பொலிஸ் வெளிப்பாடுகள், இம்ரானுடன் விருந்துக்கு சென்றவர்களின் புகைப்படங்கள் எதிர்வரும் வாரத்தில் வெளியிடப்படும் என குறித்த ஊடகவியலாளர் தெரிவித்துள்ளமை அறியக்கிடைத்துள்ளதாக துமிந்த ஜயதிலக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் தான் உயிர் பாதுகாப்பை கருத்தில்கொண்டு பிரான்ஸுக்கு வந்ததாகவும், தனக்கான அதிகாரங்களை மீண்டும் இலங்கை அரசாங்கம் தந்துதவினால் கஞ்சிபானை இம்ரானை கைது செய்து நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவேன் எனவும் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam
