12ம் திகதி தொடர்பில் சுற்றிவளைக்கப்படும் CID விசாரணை! அறிக்கையில் அதிர்ச்சி..
கடந்த வாரம் இலங்கையில் இடம்பெற்ற அனர்த்தம் தொடர்பில் பல தகவல்கள் வெளிவரும் நிலையில் இந்த அனர்த்தத்தை தடுக்க முயற்சி செய்யவில்லை என்று எதிர்கட்சிகள் உட்பட சிலர் அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தி வருகின்றனர்.
இந்த இயற்கை அனர்த்தம் தொடர்பில் கடந்த நவம்பர் 12ஆம் திகதி அரசாங்கத்திற்கு அறிக்கையொன்று கிடைத்ததாகவும், அதனை அரசாங்கம் கண்டுக்கொள்ளவில்லையென்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஆனால் இவ்வாறானதொரு அறிக்கை அரசாங்கத்திற்கு கிடைக்கபபெறவில்லை அப்படி இருந்தால் அதனை வெளிப்படுத்துங்கள் என்று அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அனர்த்தத்தை பயன்படுத்தி அரசியல் செய்பவர்களால் இது கூறப்பட்டுள்ளது உன்றும் குறிப்பிட்டார்.
இந்தவிடயம் தொடர்பில் சிறப்பு புலனாய்வுகுழு தகவல் திரட்ட ஆரம்பித்துள்ளது.
இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி..