மட்டக்களப்பில் மனித உரிமை செயற்பாட்டாளருக்கு சிஐடி விசாரணை
மட்டக்களப்பு உதவி பொலிஸ்மா அதிபர் காரியாலயத்திலிருந்து மனித உரிமை செயற்பாட்டாளர் ச.சிவயோகநாதனுக்கு விசாரணைக்கான அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
இன்று 27.07.2025 காலை 10.10 மணிக்கு மட்டக்களப்பு - கொக்குவில் பொலிஸ் நிலையத்தில் இருந்து மனித உரிமை செயற்பாட்டாளர் ச.சிவயோகநாதனது வீட்டிற்குச் சென்ற மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் உத்தியோகத்தரால் சிங்களத்தில் ஒரு கடிதம் வழங்கப்பட்டது.
கடிதம் சிங்கள மொழியில் உள்ளதால் அது தனது மொழி உரிமையை மீறும் செயல் என கூறி கடிதம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையல் மீண்டும் மதியம் 12 .00 மணிக்கு சென்ற மேற்படி பொலிஸ் அதிகாரி தமிழ் மொழியில் எழுதப்பட்ட கடிதத்தினை வழங்கிச் சென்றுள்ளார்.
தடையுத்தரவு
அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பொலிஸிற்கு எதிராக செய்துள்ள முறைப்பாடு தொடர்பில் விசாரணை ஒன்று செய்யப்பட உள்ளதால் நாளை மாலை 4.00 மணிக்கு மட்டக்களப்பு உதவி பொலிஸ்மா அதிபர் காரியாலயம் வருமாறு பணிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 19.04.2025 அன்று நடைபெற்ற அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்வதற்கு எதிராக மட்டக்களப்பு - காத்தான்குடி கொக்குவில் சந்திவெளி ஆகிய 4 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளும் ச.சிவயோகநாதன் உட்பட மூன்று பேருக்கு எதிராக நீதிமன்ற தடையுத்தரவு ஒன்றினை பெற்றிருந்தனர்.
இச்செயற்பாடானது தனக்கு இருக்கும் அடிப்படை மனித உரிமையை மீறும் செயல் என தெரிவித்து மேற்படி நான்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் எதிராக கடந்த 21.04.2025 அன்று மட்டக்களப்பு மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றினைப் பதிவு செய்திருந்தார்.
இவை தொடர்பில்,13.06.2025 அன்று உதவிப் பொலிஸ்மா அதிபர் காரியாலயம் அழைக்கப்பட்டு உதவிப் பொலிஸ்மா அதிபரால் ஒரு விசாரணையும் நடாத்தப்பட்ட நிலையில் மீண்டும் நாளை மாலை விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.








சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பொருளாதாரத் தடை - இந்திய நிறுவனமும், இந்திய வம்சாவளி கேப்டனும் நேரடி பாதிப்பு News Lankasri
