முக்கிய நிபந்தனைகளுடன் சுரேஷ் சாலேவின் மனைவி CID-க்கு அவசர கடிதம்
அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சாலேவின் மனைவி மனோரி சாலே, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் சுரேஷ் சாலேவின் உயிரை காப்பாற்றுவதற்கான சில முக்கிய கோரிக்கைகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி கடிதத்தில், தனது கணவர் தற்போது தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், தமக்கும் தமது குழந்தைக்கும் அவரை தொலைவில் இருந்து பார்ப்பதற்கு அனுமதி வழங்கபட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கோரிக்கை
இந்நிலையில், தனது கணவரின் சார்பில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் சட்டத்தரணிகள் அவரைச் சந்திப்பதற்கு அனுமதி வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவ்வாறு அனுமதி வழங்கப்படுவது, தனது கணவர் மேற்கொண்டுள்ள மரண உண்ணாவிரதத்தை கைவிடச் செய்வதற்கு உதவியாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த முக்கியமான தருணத்தில் தனது கணவருக்கு மருத்துவ சிகிச்சை மட்டுமன்றி சட்ட மற்றும் உளவியல் ஆதரவும் அத்தியாவசியமானவை எனவும் அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆயுதப்படைகள் எப்போதும் தயார்., ஈரான் விடுத்த எச்சரிக்கைக்கு பிரித்தானியா கொடுத்த பதில் News Lankasri
விருச்சிகத்தில் சந்திரன் பெயர்ச்சி : இந்த 3 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்! Manithan