மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சி - CIDயிடம் ஒப்படைக்கப்பட்ட தீவிர விசாரணை
மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நபர்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
அரச புலனாய்வுப் பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு, பொலிஸ் மா அதிபர் இந்த பணிப்புரையை விடுத்துள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில நாட்களாக நடந்த சில சம்பவங்கள் குறித்தும், சமூக வலைதளங்களில் அவற்றுக்கு இடம் கொடுத்தது குறித்தும் விசாரணை நடத்த பொலிஸ் கண்காணிப்பாளருக்கு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவங்களின் இதன் பின்னணியில் வேறு குழு உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில் அரச புலனாய்வுப் பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு விசாரணை ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இது தொடர்பான விசாரணைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் சிரேஷ்ட பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan
