மாகாண மட்டத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவு! ஆனந்த விஜேபால சுட்டிக்காட்டு
மாகாண மட்டத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவுகளைத் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
குற்றப் புலனாய்வுத் துறைக்குக் கிடைக்கும் முறைப்பாடுகள் மீதான விசாரணைகளை விரைவுபடுத்தும் நோக்கில் மாகாண மட்டத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவுகளைத் திறக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வடமத்திய மாகாண குற்றப் புலனாய்வுப் பிரிவுகளைத் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இந்தக் கருத்துக்களை சுட்டிக்காட்டியுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் துறை
அதன்படி, எதிர்காலத்தில் குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகளை ஒவ்வொரு மாகாண மக்களும் மாகாண மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவுகளுக்கு வழங்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
குற்றப் புலனாய்வுத் துறையின் விசாரணைகளை மேலும் திறம்படச் செய்வதும், அந்தத் துறைக்கு வரும் முறைப்பாடுகளின் எண்ணிக்கையைக் குறைப்பதும், மாகாண மட்டத்தில் தொடர்புடைய விசாரணைகளைத் தொடங்குவதும் இந்த விசாரணைப் பிரிவுகளை நிறுவுவதன் முக்கிய நோக்கமாகும் என்று அவர் கூறியுள்ளார்.





அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri

சவால் விட்ட ஜனனி, ஆனால் காத்திருந்த பெரிய அதிர்ச்சி.. எதிர்நீச்சல் தொடர்கிறது அடுத்த வார ப்ரோமோ Cineulagam

சூட்டிங் சென்ற மாதம்பட்டி திரும்பி வீட்டுக்கு வராதது ஏன்? குழந்தைக்கு நியாயம் கேட்கும் ஜாய்! Manithan

ஜனனி கேட்ட கேள்வி, குணசேகரனுக்கு தெரியவந்த ஜீவானந்தம் நிலைமை... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
