கெஹலிய குடும்பம் மீது மற்றுமொரு குற்றப் பத்திரிகை தாக்கல்
சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது நால்வர் குடும்பத்தினருக்கு எதிராக கொழும்பு உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
97 மில்லியன் ரூபா பெறுமதியிலான சட்டவிரோத சொத்துகள் தொடர்பில் லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழு இந்த குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளது.
வெளிநாட்டு பயண தடை
இந்த குற்றப்பத்திரிக்கை கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்னே முன்னிலையில் இன்று அதிகாரப்பூர்வமாக சமர்ப்பிக்கப்பட்டது.
வழக்கில் சந்தேக நபர்களான கெஹெலிய ரம்புக்வெல்லவும், அவரது நான்கு குடும்பத்தினரும் தலா 50000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் தலா ஒரு மில்லியன் ரூபா என்ற அடிப்படையில் இரண்டு சரீர பிணைகளின் அடிப்படையில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த வழக்கில் அனைத்து சந்தேக நபர்களுக்கும் வெளிநாட்டு பயண தடை விதிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் அறிவித்தது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |