லிந்துலையில் தேவாலயமும், தபாலகமும் சேதம்: பெண் ஒருவர் கைது
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகசேனை நகரில் தபால் நிலையம் மற்றும் கிறிஸ்தவ ஆலயம் ஆகியன உடைக்கப்பட்டுச் சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில் பெண் ஒருவர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாகசேனை நகரத்தில் இயங்கும் தபால் நிலையம் நேற்று இரவு உடைக்கப்பட்டு பொருட்களும் சேதமாக்கப்பட்டுள்ளன. இதேவேளை தபாலகத்திற்கு முன்பாக உள்ள இருதய ஆண்டவர் கிறிஸ்தவ ஆலயத்தின் முன்பகுதியில் காணப்பட்ட கிறிஸ்தவ சுரூபமும் உடைக்கப்பட்டுள்ளது.
அத்தோடு ஆலயத்தின் முன்பகுதியிலிருந்த ஏனைய பொருட்களும் சேதமாக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் பிரதேச மக்கள் லிந்துலை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட பின், குறித்த தபால் நிலையத்தில் உள்ள சமையலறைக்குச் சென்ற பொழுது, அங்கிருந்த 38 வயது மதிக்கத்தக்கப் பெண் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பெண்ணிடம் விசாரணைகளை மேற்கொள்ளும்
லிந்துலை பொலிஸார், இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரரணைகைளையும் மேற்கொண்டு
வருகின்றனர்.





நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 21 Evening
ஈரான் போரில் அமெரிக்காவின் உண்மை நிலை... கசியவிட்ட அதிகாரிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை News Lankasri