தொடர்ச்சியான போதைப்பொருள் பாவனை: யாழில் பரிதாபமாக உயிரிழந்த குடும்பஸ்தர்
யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியான ஹெரோயின் போதைப்பாவனைக்கு அடிமையாகியிருந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கொடிகாமம், வரணி இயற்றாலையைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தை (37 வயது) ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
போதைப்பொருள் குற்றச்சாட்டில் கடந்த நவம்பர் மாதம் 26ஆம் திகதி இவர் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

மரண விசாரணை
இந்த நிலையில், கடந்த 10ஆம் திகதி இவருக்கு ஏற்பட்ட வயிற்று வலி காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் (18.01.2023) இரவு உயிரிழந்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.
குறித்த மரண விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டுள்ளார்.
தொடர்ச்சியான ஹெரோயின் பாவனையே இவரது உயிரிழப்புக்குக் காரணம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இதெல்லாம் வெறும் ட்ராமா! மோகன் சர்மா முதியோர் இல்ல நாடகம் குறித்து குட்டி பத்மினி பரபரப்பு பேட்டி Manithan
27வது திருமண நாள் நெருங்கும் நிலையில் விவாகரத்து வழக்கு வாபஸ்! விஜய்யுடன் மீண்டும் இணைவாரா? Manithan