நெருங்கும் கிறிஸ்மஸ்! உலகம் எதிர்நோக்கவுள்ள ஆபத்து தொடர்பில் பிரபல அமெரிக்க நிபுணரின் எதிர்வுகூறல்
ஒமிக்ரோன் தொற்று பாதிப்பின் தீவிரத்தை பொறுத்தவரை, தடுப்பூசி போட்டவர்களுக்கும், தடுப்பூசி போடாதவர்களுக்கும் இடையே பெருமளவு வேறுபாடு காணப்படும் என்று தொற்றுநோய் சிகிச்சை நிபுணர் அந்தோணி பவுசி கூறியுள்ளார்.
அந்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த செவ்வியிலேயே இது குறித்து விபரித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஒமிக்ரோன் தொற்று, அசாதாரண வேகத்தில் பரவக்கூடியது என்பதில் சந்தேகம் இல்லை. தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. கிறிஸ்மஸ் தொடர்பான பயணங்களால் ஒமிக்ரோன் தொற்று பாதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
எனவே, அடுத்த ஓரிரு வாரங்களில் வைத்தியசாலைகளில் கடும் நெருக்கடி ஏற்படும். தொற்று பாதிப்பின் தீவிரத்தை பொறுத்தவரை, தடுப்பூசி போட்டவர்களுக்கும், தடுப்பூசி போடாதவர்களுக்கும் இடையே பெருமளவு வேறுபாடு காணப்படும். எனவே, தடுப்பூசி போடாதவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Bigg Boss: பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற கதறியழும் சாண்ட்ரா... பிக்பாஸ் எடுக்கும் முடிவு என்ன? Manithan