இந்தியாவில் வியக்க வைக்கும் கிறிஸ்மஸ் தாத்தா மணற்சிற்பம்
கிறிஸ்மஸ் தினத்தையொட்டி இந்தியாவின் - ஒடிசாவின் பூரி கடற்கரையில் உருவாக்கப்பட்டுள்ள பிரமாண்டமான கிறிஸ்மஸ் தாத்தா உருவ மணற்சிற்பம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இந்த மணற் சிற்பம் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சுதர்சன் பட்நாயக் என்பவரால் உருவாக்கப்பட்டுள்ளது.
பிரபல மணற்சிற்ப கலைஞரான சுதர்சன் பட்நாயக் முக்கிய நிகழ்வுகளின் போது ஒடிசாவின் பூரி கடற்கரையில் மணற்சிற்பம் அமைப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
வெங்காயம் மற்றும் மணலைக் கொண்டமைந்த சிற்பம்
இதற்கமைய நேற்று (25.12.2023) கிறிஸ்மஸ் விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு, பூரி கடற்கரையில் 2,000 கிலோ வெங்காயம் மற்றும் மணலைக் கொண்டு கிறிஸ்துமஸ் தாத்தா மணற்சிற்பத்தை வடிவமைத்துள்ளார்.
குறித்த மணற்சிற்பம் 100 அடி நீளம், 20 அடி உயரம் மற்றும் 40 அடி அகலம் கொண்டமைந்ததாக காணப்படுகின்றது.
மேலும், இந்த சிற்பத்தின் மூலம் ‘மரக்கன்றை பரிசளிப்பீர்; பூமியை பசுமையாக்குவீர்' என்ற செய்தியை உலகிற்கு உணர்த்துவதாக சுதர்சன் பட்நாயக் குறிப்பிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |