யாழ். மரியன்னை பேராலயத்தில் நத்தார் விசேட திருப்பலி (Video)
யாழ்ப்பாணம் மரியன்னை பேராலயத்தில் நத்தார் தினத்தை முன்னிட்டு விசேட திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளை இன்றைய தினம் (25.12.2023) கொண்டாடிக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் யாழ். மரியன்னை பேராலயத்தில் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் பேரனாட் ஞானப்பிரகாசத்தினால் நத்தார்விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது.
நத்தார் விசேட திருப்பலி
இதன்போது ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள இயேசு பாலன் பிறப்பை வெளிப்படுத்தும் பாலன் குடில் ஆயர்களால் ஒளியேற்றப்பட்டுள்ளது.

இந்த நத்தார் விசேட திருப்பலி நிகழ்வில் யாழ். மறை மாவட்ட குரு முதல்வர், அருட்தந்தையர்கள் ,வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மற்றும் பெருமளவிலான பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri