நியூசிலாந்தின் புதிய பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் பதவியேற்றார்
நியூசிலாந்தின் புதிய பிரதமராக தொழிலாளர் கட்சித் தலைவர் கிறிஸ் ஹிப்கின்ஸ் (Chris Hipkins) பதவியேற்றுள்ளார்.
நியூசிலாந்து முன்னாள் பிரதமர் ஜெசிந்தா அடர்ன் (Jacinda Ardern) பதவியில் இருந்து விலகுவதாக கடந்த வாரம் அறிவித்ததையடுத்து, 41ஆவது பிரதமாக 44 வயதாகும் கிறிஸ் ஹிப்கின்ஸ் இன்று (25.01.2023) பதவியேற்றுக்கொண்டார்.
ஹிப்கின்ஸ் பிரதமராக மட்டுமல்லாமல் தேசிய பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை அமைச்சராகவும் இருப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

எனது வாழ்க்கையின் மிகப்பெரிய பொறுப்பு
பதவியேற்ற பின்னர் ஹிப்கின்ஸ் கூறியதாவது, “இந்த பதவி எனக்கு கிடைத்த மிக பெரிய பாக்கியம் எனது வாழ்க்கையின் மிகப்பெரிய பொறுப்பு” என்று கூறியுள்ளார்.
இந்த பதவியில் தனக்கு வரும் சவால்களை எதிர்கொள்வதில் நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
தமிழக அரசின் சிறந்த சின்னத்திரை கலைஞர்களுக்கான விருது (2014-2022)... யார் யாருக்கு விருது, முழு விவரம் Cineulagam
12 ஆண்டுகளுக்கு முன் கோமாவிற்கு சென்ற உலக சாம்பியன் ஷூமேக்கர் - உடல் நிலையில் முன்னேற்றம் News Lankasri