மனித மூளைக்குள் ‘சிப்’ வைக்க கிடைத்தது அனுமதி: எலான் மஸ்க்கின் புதிய முயற்சி
புதிய சாதனை எலான் மஸ்க்கின் நியூராலிங்க் நிறுவனம் மனித மூளையில் சிப் பொருத்துவதற்கான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வரும் நிலையில் மனித மூளையில் சிப் பொருத்தி ஆய்வு செய்ய நியூராலிங்க் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மனித மூளையில் பொருத்தி ஆராய்ச்சி செய்ய நியூராலிங்க் நிறுவனம் விண்ணப்பித்திருந்த நிலையில் அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.
குறிப்பாக முடக்குவாதம் உள்ளவர்கள், நரம்பு பிரச்சினை, கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள் கணனி மற்றும் மொபைல் உள்ளிட்ட சாதனங்களை தொடாமலே மூளையில் அமைக்கும் சிப்பை கொண்டு இயக்குவதுதான் இந்த மைக்ரோ சிப் ஆராய்ச்சியின் முக்கியமான நோக்கம் என தெரிவிக்கப்படுகிறது.
குரங்குகள் உள்ளிட்ட விலங்குகள் பலவற்றிற்கு இவ்வாறாக இந்த சிப் பொருத்தி ஆராய்ச்சி செய்யப்பட்டது.
அதில் குரங்கு ஒன்று கைகளால் கணனியை தொடாமலே அதில் மைக்ரோசிப் உதவியுடன் கேம் விளையாடுவதான காணொளியும் வெளியாகியிருந்தது.
இதேவேளை மூளையில் இதுபோன்ற மைக்ரோ சிப் அமைப்பது குறித்த நபருக்கு பக்கவிளைவு ஏற்படுத்துவதாகவும் சிலர் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.