பிரித்தானிய கடற்பகுதியில் உலவும் சீன போர் கப்பல்கள்
பிரித்தானிய (UK) கடல் பகுதியின் ஊடாக சீன (China) போர் கப்பல்கள் இரண்டு கடந்து சென்றதை அவதானித்துள்ளதாக ராயல் கடற்படை தெரிவித்துள்ளது.
கடந்த 3 வாரங்களில் 2 முறை சீன போர் கப்பல்கள் பிரித்தானிய கடல் பகுதி வழியாக சென்றுள்ளதை பிரித்தானிய கடற்படையின் எச்எம்எஸ் ரிச்மண்ட் மிக நெருக்கமாக கவனித்து வந்தாக கூறியுள்ளது.
வெளிநாட்டு போர்க்கப்பல்களை கண்காணிப்பது கடற்படைக்கு ஒரு வழக்கமான நடவடிக்கையாக உள்ள போதிலும் சீன கடற்படை அனுப்பிய கப்பல்களை விட ரஷ்ய (Russia) கப்பல்களை கண்காணிப்பதை பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் விளம்பரப்படுத்துவது மிகவும் பொதுவானதாகும்.
அவதானிப்பு நடவடிக்கை
அதேவேளை, சீனக் கப்பல்கள் பிரித்தானிய கடல் வழியாகச் செல்வது பொதுவானது அல்ல என்றும், கடைசியாக 2019ஆம் ஆண்டில் தான் சீன போர்க்கப்பல்கள் பிரித்தானிய கடல் வழியில் சென்றுள்ளன என்றும் ரோயல் கடற்படை கூறுகிறது.
பிரித்தானிய கடற்படையின் இந்த அவதானிப்பு நடவடிக்கையானது அதன் பாதுகாப்பு மற்றும் இறையாண்மை குறித்த அவதானத்தையும் எடுத்துக் காட்டும் முகமாக உள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |