அவுஸ்திரேலிய கடற்பரப்புக்குள் நுழைந்த சீன போர்க்கப்பல்
மூன்று சீன போர்க்கப்பல்களை அவுஸ்திரேலியா கண்காணித்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிட்னியில் இருந்து 150 கடல் மைல் தொலைவில் மூன்று சீனப் போர்க்கப்பல்களை அவுஸ்திரேலிய பாதுகாப்புப் படை கவனித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வாரம் வடக்கு - கிழக்கு குயின்ஸ்லாந்தின் சர்வதேச கடலில் இந்தக் கப்பல்கள் முதன்முதலில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கடல்சார் அணுகுமுறை
மேலும் சமீபத்திய நாட்களில் கடற்கரையில் படிப்படியாகப் பயணிப்பதைக் காணமுடிந்துள்ளதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
அந்தக் கப்பல் சீனபடைக்குச் சொந்தமானது எனவும், இவை சீனாவின் Renhai-class Cruiser Zunyi, Fuchi-class replenishment, Weishanhu என அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அவுஸ்திரேலியாவின் பிரத்தியேக பொருளாதார மண்டலம் மற்றும் கடல்சார் அணுகுமுறைகளில் உள்ள அனைத்து கடல்சார் போக்குவரத்தையும் அந்நாட்டு பாதுகாப்புப் படை தொடர்ந்து கண்காணித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.
சீன , சர்வதேச சட்டத்தின் கீழ், குறிப்பாக ஐக்கிய நாடுகளின் கடல் சட்டம் தொடர்பான மாநாட்டின் கீழ், சர்வதேச நீர் மற்றும் வான்வெளியில் சுதந்திரமாக வழிசெலுத்தல், வான்வழிப் பறப்பு ஆகியவற்றைப் பயன்படுத்துவதற்கான அனைத்து உரிமைகளையும் அவுஸ்திரேலியா மதிக்கிறது என்றும் அந்நாட்டு பாதுகாப்புப் படை கூறியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இந்தியாவில் இன்றும் பிரிட்டிஷுக்கு கீழே இயங்கும் ஒரே ஒரு ரயில் நிலையம்.., எது தெரியுமா? News Lankasri

மாஸ் வரவேற்பு பெற்றுள்ள டிராகன் படத்திற்காக பிரதீப் வாங்கிய சம்பளம்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam
