இலங்கையின் புதிய ஜனாதிபதிக்கு சீன ஜனாதிபதி வாழ்த்து
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அநுரகுமார திசாநாயக்கவிற்கு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
09ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க இன்று காலை பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
இந்த நிலையில் சீன ஜனாதிபதியின் வாழ்த்து குறிப்பில், சீன அரசாங்கத்தின் சார்பிலும் மக்களின் சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றேன்.
நட்பு அயல்நாடுகள்
இலங்கையும் சீனாவும் பாரம்பரிய நட்பு அயல்நாடுகள். இருநாடுகளும் இராஜதந்திர உறவை ஏற்படுத்தி 67 வருடங்களாகின்ற நிலையில் இரு நாடுகளும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் புரிந்துணர்வையும், ஆதரவையும் வழங்கி வருகின்றன.

இதன்மூலம் இருநாடுகளும் நட்புறவுமிக்க சகவாழ்வு வேவ்வேறு அளவிலான நாடுகளிடையிலான பரஸ்பரம் நன்மையளிக்க கூடிய ஒத்துழைப்பு ஆகியவற்றிற்கான சிறந்த உதாரணங்களாகும்.
நான் இலங்கை சீன உறவுகளிற்கு பெரும் முக்கியத்துவத்தை வழங்குகின்றேன். உங்களுடன் பாரம்பரிய நட்புறவை முன்னெடுப்பதற்கும், பரஸ்பர அரசியல் நம்பிக்கையை வலுப்படுத்துவதற்கும் புதிய பட்டுப்பாதை திட்டத்தில் வெற்றிகரமான விடயங்கள சாதிப்பதற்கும்நான் ஆர்வமாக உள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
மாபெரும் வெற்றியடைந்த கட்டா குஸ்தி 2... விஷ்ணு விஷாலுக்கு தயாரிப்பாளர் கொடுத்த பிரம்மாண்ட பரிசு Cineulagam
பேச்சுலர் வாழ்க்கைக்கு குட் பாய் சொல்லும் நடிகர் பிரபாஸ்- மனைவிக்காக என்ன செய்துள்ளார் பாருங்க... Cineulagam