சினோபெக்கின் இலங்கை பிரவேசம்! அந்நிய செலாவணி கையிருப்பு மீதான அழுத்தத்தை குறைக்க உதவும் என்கிறார் கஞ்சன
சீன எண்ணெய் நிறுவனமான சினோபெக் இலங்கையில் தனது செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ள நிலையில் அரசாங்கம் நிர்ணயித்த அதிகபட்ச சில்லறை விலையை விட குறைந்த விலைக்கு எரிபொருளை விற்க அனுமதிக்கப்படும் என இலங்கையின் மின்துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் செப்டெம்பர் 20ஆம் திகதி சினோபெக் தனது செயற்பாடுகளை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சந்தை இரட்டையாட்சியை முடிவுக்குக் கொண்டுவரும்
அவர் மேலும் தெரிவிக்கையில், சினோபெக்கின் இலங்கை பிரவேசம் இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு மீதான அழுத்தத்தை குறைக்க உதவும், அத்துடன் இரண்டு சர்வதேச எரிபொருள் விநியோகத்தர்கள், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்திற்குள் செயற்பாடுகளை ஆரம்பிப்பார்கள்.
அவுஸ்திரேலியாவின் யுனைடெட் பெட்ரோலியம் மற்றும் அமெரிக்க நிறுவனமான ஆர்எம் பார்க்ஸ் ஆகியவையே எரிபொருள் விநியோகத்துக்காக ஒப்புதல் பெற்ற ஏனைய இரண்டு நிறுவனங்களாகும்.
இந்தநிலையில் புதிய நிறுவனங்களின் பிரவேசம், அரச நிறுவனமான, சிலோன் பெட்ரோலியம் கோர்ப்பரேஷன் மற்றும் இந்தியன் ஒயில் கோர்ப்பரேசனின் ஒரு பிரிவான லங்கா ஐஓசி ஆகியவற்றின் சந்தை இரட்டையாட்சியை முடிவுக்குக் கொண்டுவரும் என்று ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |



