சீன கப்பலின் இலங்கை வருகைக்கு பின்னால் மகிந்த..!
சர்ச்சைக்குரிய சீன கப்பல் நாட்டிற்குள் நுழைவதற்கு அனுமதி வழங்கப்பட்டதன் பின்னணியில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச செயற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கப்பல் விவகாரம் தொடர்பில மகிந்தவுடன் கலந்துரையாடல்
சீன தூதுவர் மற்றும் இந்திய உயர் ஸ்தானிகர் ஆகிய இருவரும் கப்பல் விவகாரம் தொடர்பில் மகிந்த ராஜபக்சவுடன் கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளனர்.
இருவரது கருத்துக்களையும் மிகவும் அமைதியான முறையில் கேட்டுக்கொண்டிருந்த மகிந்த அடுத்த நாள் காலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசகரான சாகல ரத்நாயக்கவுக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தியுள்ளார்.
சீனாவினால் இலங்கை மீது தடை
கப்பலை நாட்டிற்கு அனுமதிக்கவில்லை என்றால் சீனாவில் உள்ள இலங்கை தூதரக அலுவலகம் மூடப்படும், சீனாவினால் இலங்கை மீது தடை கொண்டு வரப்படும், போர்ட்சிட்டியில் இருந்து சீனா விலகிவிடும் என மகிந்த குறிப்பிட்டுள்ளார்.
இதனால் சீன கப்பலுக்கு அனுமதிக்குமாறு மகிந்த தெரிவித்து 2 மணித்தியாலங்களுக்குள் கப்பலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.