இலங்கையில் சீன இராணுவக் கடற்படைத் தளம்: போர் பதற்ற நிலை உருவாகும் அபாயநிலை..!
சீனாவின் மக்கள் விடுதலை இராணுவக் கடற்படையின் தளத்தை அமைக்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடத்தில் இருப்பதாக வர்ஜீனியாவில் உள்ள வில்லியம் மேரி பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட Aid Data ஆராய்ச்சியில் தெரியவருகிறது.
ஹம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்திக்கு ஏற்கனவே சீனா 2.13 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்துள்ளது.
சீனாவின் இலக்குகளை அடைந்து கொள்ள இது அதிக வாய்ப்பாக அமையும் எனவும் வில்லியம் மேரி பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் சீனாவின் மக்கள் விடுதலை இராணுவ கடற்படை தளத்தை இலங்கையில் அமைக்கும் பட்சத்தில் மேற்கத்திய பொருளாதாரத் தடைகள் ஏற்பட்டால், கப்பல் வழிகளைப் பாதுகாக்கவும் உளவுத் தகவல்களை சேரிக்கவும் சீனாவிற்கு இது உதவியாக அமையும் என தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றங்கள் ஏற்கனவே தெற்காசியாவில் ஒரு போர் பதற்ற நிலையை உருவாக்கும் என்ற அபாய நிலையும் உள்ளதாக வில்லியம் மேரி பல்பலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இன்னும் பல முக்கிய செய்திகளுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
