இலங்கையிலுள்ள சீனர்களின் கபடநாடகம் அம்பலம்: காவல்துறை மா அதிபர் விடுத்துள்ள உத்தரவு - செய்திகளின் தொகுப்பு(Videos)
இலங்கையில் திட்டங்களைச் செயற்படுத்துவதற்காக வந்துள்ள சீனப் பிரஜைகள் இலங்கைப் பெண்களைத் திருமணம் செய்து சீனாவுக்கு அழைத்துச் சென்று பலவந்தமாக விபச்சாரத்தில் ஈடுபடும் மோசடி தொடர்பில் விசாரணை நடத்த காவல்துறை மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
கடத்திச் செல்லப்பட்டு விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட பத்து இலங்கைச் சிறுமிகள் தொடர்பில் ஏற்கனவே தகவல்கள் கிடைத்துள்ளதாகச் சிரேஷ்ட பாதுகாப்புத் தலைவர் ஒருவர் தகவல் அளித்துள்ளார்.
ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த அழகான இளம் பெண்களைத் தேர்வு செய்து திருமணம் செய்து சீனாவுக்கு அழைத்துச் சென்று இரவு விடுதிகளில் பணியமர்த்துவது தெரியவந்துள்ளது.
இது தொடர்பான விரிவான தகல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய காலை நேர செய்திகளின் தொகுப்பு,



