சீன வெளிவிவகார அமைச்சரை ஏன் நாமல் வரவேற்றார்?
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ (Wang Yi)வை ஏன் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச வரவேற்றார் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா விளக்கியுள்ளார்.
சீன வெளிவிவகார அமைச்சரை, இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் வரவேற்கவில்லை.
விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச விமான நிலையத்திற்கு சென்று சீன வெளிவிவகார அமைச்சரை வரவேற்றிருந்தார்.
சீனாவுடன் தனிப்பட்ட ரீதியிலான உறவுகள் பேணப்பட்டு வருவதனால், நாமல் விமான நிலையம் சென்று வரவேற்றார் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
சீனா போன்ற வலுவான நாட்டின் தலைவர்கள் அடிக்கடி இலங்கை போன்ற சிறிய நாட்டுக்கு விஜயம் செய்வது பாரதூரமான பிரச்சினையாகும் எனவும் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
எந்த அமைச்சர் வந்தாலும் நாட்டின் மீதூன நேசத்தினால் அவர்கள் வரவில்லை எனவும், நாட்டின் வளங்களை கொள்ளையிடுவதே அவர்களின் நோக்கம் எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
அவர் கிரீன்லாந்தைக் கைப்பற்றினால்... உலக முடிவுக்கு காரணமாகும்: ட்ரம்பிற்கு ரஷ்யா எச்சரிக்கை News Lankasri
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்... என்ன தெரியுமா? Cineulagam