தீவிரமடையும் உளவு கப்பல் விவகாரம் - இலங்கை அதிகாரிகளுடன் அவசர சந்திப்பை கோரியுள்ள சீன தூதரகம்
சீனாவின் விண்வெளி மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு ஆய்வுக் கப்பலான 'யுவான் வாங் 5' ஆகஸ்ட் 11 முதல் 17 வரை அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனினும் இந்தியாவின் கடும் அதிருப்தியின் காரணமாக, இலங்கையின் வெளிவிவகார அமைச்சு கொழும்பில் உள்ள சீன தூதரகத்திற்கு ஆகஸ்ட் 5 திகதியிட்ட ராஜதந்திர 'மூன்றாம் நபர்' குறிப்பில், இந்த விவகாரம் குறித்து மேலும் ஆலோசனை செய்யப்படும் வரை யுவான் வாங் 5 கப்பல், அம்பாந்தோட்டைக்கு வருவதை ஒத்திவைக்குமாறு கோரியிருந்தது.
இந்தியாவின் கடும் அதிருப்தி
இதனையடுத்து சீன தூதுவர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து, பீஜிங்கின் ஆலோசனையை பெற்று பதில் கூறுவதாக அறிவித்திருந்தார் என்று முன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனினும் இந்த சந்திப்பு குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகளை ஜனாதிபதி அலுவலகம் மறுத்துள்ளது.
இந்த நிலையிலேயே சீன தூதரகம், இலங்கையின் சிரேஸ்ட அதிகாரிகளின் சந்திப்பை
கோரியிருக்கும் செய்தி வெளியாகியுள்ளது.
மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை News Lankasri
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri