திடீரென மண்ணில் புதையும் சீன நகரங்கள்: ஆய்வில் வெளியான எச்சரிக்கை தகவல்
சீனாவில் உள்ள நகரங்கள் சில திடீரென மண்ணில் புதைய ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவில் 50 இற்கும் அதிகமான ஆராய்ச்சியாளர்கள் இணைந்து நடத்திய ஆய்வில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கு பிரதான காரணமாக சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்குக் கடந்த சில தலைமுறைகளாகவே அங்கு நடந்த கட்டுமானங்கள் என கூறப்படுகின்றது.
அதேவேளை, அதிகமாக நிலத்தடி நீரினை உரிஞ்சி எடுப்பதாலும் இந்த பிரச்சினை ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
புதையும் நகரங்கள்
இது தொடர்பில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் மூலம் 45% நகரங்கள் ஆண்டுக்கு 0.1 அங்குலம் என்ற அளவில் மண்ணில் புதைந்து வருவதாக கூறப்படுகின்றது.
இதன் காரணமாக கோடிக்கணக்கிலான மக்கள் பாதிப்படையக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சீனாவில் இந்த பிரச்சினை பரவலாக உள்ளதாகக் கூறப்பட்டுள்ள நிலையில், நகர்ப்புற திட்டமிடல், உள்கட்டமைப்பு குறித்து மீண்டும் சிந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மேலும், நகரங்கள் இவ்வாறு மண்ணுக்குள் புதைவது பல கோடி மக்களை ஆபத்தில் தள்ளும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |