சீன இராட்சத பலூன் விவகாரம்!கனேடிய விமானிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை
அமெரிக்க வான்வெளியில் பறந்த சீன உளவு பலூன் விவகாரம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கனடா விமானிகளுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனடாவின் மரமற்ற பரந்த புல்வெளி பிரதேசங்களான ஒன்ராறியோ மற்றும் கியூபெக் பகுதிகளின் மீது பறக்கும் விமானிகள் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும், அமெரிக்க வான்வெளியில் காணப்பட்ட பலூன்கள் போன்று சந்தேகத்திற்குரிய நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு தகவல் தெரிவிக்கவும் கோரியுள்ளனர்.
விழிப்புடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்
சம்பந்தப்பட்ட கண்காணிப்பு பலூன் கனடா வான்வெளியிலும் காணப்பட்ட நிலையில், காலம், விபரங்கள் கனேடிய அதிகாரிகளால் தெளிவுபடுத்தப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் தான், கல்கரி, எட்மண்டன், ரெஜினா, சாஸ்கடூன், வின்னிபெக், தண்டர் பே, ரொறன்ரோ, மாண்ட்ரீல் மற்றும் கியூபெக் நகரங்களில் உள்ள விமான நிலையங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் பறக்கும் விமானிகள் விழிப்புடன் செயற்படுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், மேற்கு ஆல்பர்ட்டா மற்றும் கிழக்கு கியூபெக்கிற்கு இடையே உள்ள பல சிறிய பிராந்திய விமான நிலையங்கள் தொடர்பிலும் எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த தேதியில் பிறந்தவங்க துணைக்காக எதையும் துணிச்சலாக செய்வார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan

உக்ரைன் உடைந்து சின்னாபின்னமாகும்... இந்த இரண்டு நாடுகளும் உலகை ஆளும்: எச்சரிக்கும் வாழும் நோஸ்ட்ராடாமஸ் News Lankasri
