சீனாவில் பரவி வரும் புதிய வகை வைரஸ்: சீனாவில் மீண்டும் முழு ஊரடங்கு - செய்திகளின் தொகுப்பு (Video)
சீனாவின் வுகான் நகரில் 2019-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கோவிட் வைரஸ் 221க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி தற்போது வரை பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
கோவிட்டை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கோவிட் வைரஸ் உருமாற்றமடைந்து தொடர்ந்து பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், சீனாவில் அடுத்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பீதியை ஏற்படுத்தி உள்ளது.
சீனாவின் வடகிழக்கில் தொழிற்சாலைகள் நிறைந்த சாங்சன் பகுதியில் ஏறக்குறைய 90 இலட்சம் மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த நகரில் தான் புதிய வைரஸ் மக்களுக்கு பரவி வருகிறது.
இதையடுத்து, இந்த சாங்சுன் நகர் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஏ.பி.செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,