தொடரும் மற்றுமொரு போர் பதற்றம்! தாய்வானில் சீனா அதிரடி நடவடிக்கை
சீனா தாய்வானை சுற்றி வளைத்து போர் பயிற்சியை இன்று இரண்டாவது நாளாக முன்னெடுத்து வருகின்றது.
இன்றைய களநிலவரப்படி, தாய்வானை சுற்றிய வான் மற்றும் நீர் பரப்பில் சீன போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் கடுமையான போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன என சீன இராணுவம் தெரிவித்துள்ளது.
தைவானை வட்டமிட்ட 71 சீன விமானங்கள், 9 போர் கப்பல்கள்
இதன்படி, இன்று காலை தாய்வானை சுற்றி 71 சீன விமானங்கள், 9 போர் கப்பல்கள், Su-30 போர் விமானங்கள் மற்றும் H-6 குண்டுவீச்சு விமானங்கள் தைவானை சுற்றி நிலை நிறுத்தப்பட்டுள்ளன.
அதில் 45 விமானங்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளன. அவற்றில் ஜே-11, ஜே-10, ஜே-16, ஜே-18, ஒய்-8 ஏ.எஸ்.டபிள்யூ., ஒய்-20, கே.ஜே.-500 உள்ளிட்ட விமானங்களும் அடங்கும்.
இந்த கப்பல்களும், விமானங்களும் இலக்கை துல்லியமாக தாக்கக்கூடியது என்று சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதில் J-18 (Jianjiji-18) எனும் போர் விமானத்தை சீனா பயன்படுத்தியுள்ளது. இந்த வகை விமானங்கள் நீர்மூழ்கி கப்பல்களை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்டவையாகும்.
அதேபோல இது பறப்பதற்கு மிக குறைந்த தொலைவிலான ஓடு பாதை இருந்தாலே போதுமானதாகும். மேலும், தரையிறங்கும்போது இது செங்குத்தாக ஹெலிகாப்டர் போன்று தரையிறக்கும். அமெரிக்காவின் நவீன போர் விமானங்களுக்கே இது சவால் விடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
தாய்நாட்டை பாதுகாக்க போராடுவோம்
அவை தைவான் ஜலசந்தியின் மைய பகுதிக்குள் நுழைந்து தென்மேற்கு நகருக்குள் சென்றது என தாய்வான் அமைச்சகம் தெரிவிக்கின்றது.
இதனை தொடர்ந்து வெளியிட்ட மற்றொரு அறிவிப்பில், தாய்வான் எங்களது தாய்வீடு. நாங்கள் எங்கே போனாலும், என்னவெல்லாம் எதிர்கொண்டாலும், அதெல்லாம் ஒரு விசயமே இல்லை.
தாய்வான் எப்போதும் அழகாகவும், வசீகரிக்கும் வகையிலும் உள்ளது. இந்த நிலத்தின் ஒவ்வொரு கதையும் எங்களது நினைவுகளில் பதிந்து உள்ளது.
எங்களது தாய்நாட்டை மற்றும் எங்களது வீட்டை பாதுகாக்க முழு மனதோடு, நாங்கள் போராடி வருகிறோம் என தெரிவித்து உள்ளது.
பின்னணி
தாய்வான் அதிபர் சாய் இங் வென் சமீபத்தில் தென்அமெரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தைப்பேவுக்கு வரும் வழியில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு சென்றார்.
இந்த பயணத்தின் போது தைவான் அதிபரை அமெரிக்க சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி சந்திக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சீனா, இந்த சந்திப்பு நடைபெற கூடாது என்று இருதரப்பையும் கடுமையாக எச்சரித்தது.
ஆனால் சீனாவின் எச்சரிக்கையையும் மீறி கடந்த சில தினங்களுக்கு முன்பு, தாய்வான் அதிபர் சாய் இங் வென்னை அமெரிக்க சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி சந்தித்து பேசினார்.
இதனால், ஆத்திரமடைந்த சீனா, தாய்வானை சுற்றி வளைத்து போர் பயிற்சியை தொடங்கியது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

இந்தியா-பாக் பதற்றம் தீவிரம்: பாகிஸ்தான் அரசு ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் செய்தி News Lankasri

Post office -ன் இந்த 5 சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் FD-யை விட அதிக வட்டியைப் பெறலாம் News Lankasri
