சீனாவின் கொரோனா ஆயுத மர்மம்!
கொரோனா கிருமிகள் என்பது சீன விஞ்ஞானிகளால் சீனாவின் பரிசோதனைக் கூடங்களில் உருவாக்கப்பட்டவை என்று மேற்குலகம் கடுமையாகக் குற்றம் சுமத்திக்கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில், சீனா நினைத்த மாத்திரத்தில், நினைத்த இடத்தில் கொரோனா தாக்கத்தை அதிகப்படுத்தக்கூடிய அல்லது தணிக்கக்கூடிய வகையிலான தொழில்நுட்பத்தை சீனா கொண்டிருக்கின்றதா என்கின்ற conspiracy theories இனை அடிப்படையாகக்கொண்ட ஒளியாவணம் இது.
உயர் அதிர்வுகள் மூலம் கொரோனா கிருமிகளைக் கட்டும்படுத்தும் தொழில்நுட்பத்தை சீனா பயன்படுத்துகின்றதா என்ற சந்தேகமும் சில நோக்கர்களினால் எழுப்பப்பட்டு வருகின்றது.
ஆதாரங்கள் பெரிதாக இல்லாமல், வெறும் அணுமானங்களை மாத்திரம் அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட ஒரு ஒளியாவணம் தான் இந்த 'உண்மையின தரிசனம்' நிகழ்ச்சி:
தென் சீனக் கடலில் சீனா அமைத்துவருகின்ற செயற்கைத் தீவுகள் பற்றிய உண்மையின் தரிசனம் நிகழ்ச்சியைப் பார்க்க இங்கே அழுத்தவும்



