சினோபார்ம் கோவிட் தடுப்பூசிகளை அன்பளிப்பாக வழங்க இலங்கையின் அனுமதிக்காக சீனா காத்திருப்பு
இலங்கைக்கு 6 இலட்சம் “சினோபார்ம்” கோவிட் வைரஸ் தடுப்பூசிகளை அன்பளிப்பாக வழங்க இலங்கையின் அனுமதிக்காகச் சீனா காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் தடுப்பூசிக்கு இலங்கையின் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை.
இந்தநிலையில் சீனாவில் இரண்டு பாரிய தடுப்பூசி உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக இலங்கையின் தூதர் பாலித கோகன தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், சீன தடுப்பூசிகளை இலங்கைக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை இரண்டு உற்பத்தி நிறுவனங்களும் ஏற்றுக்கொண்டது.
இந்தநிலையில் சீன அரசாங்கம் இலங்கைக்கு 300,000 தடுப்பூசிகளை அன்பளிக்கவுள்ளது .
எனவே அவசரகால பயன்பாட்டிற்காகச் சீனாவின் “சினோபார்ம்” தடுப்பூசியை பெற்றுக்கொள்வது இப்போது இலங்கை அதிகாரிகளின் கைகளில் உள்ளன என்றும் பாலிதகொகன குறிப்பிட்டுள்ளார்.
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 16 மணி நேரம் முன்
12 மாதங்களின் பின் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த ராசியினருக்கு பொற்காலம் ஆரம்பம் Manithan