இலங்கையின் நிதிச் சிக்கல்களைத் தணிக்கச் சீனா எடுத்துள்ள முடிவு: அச்சத்தில் ஆபிரிக்க நாடுகள்
கடனைத் திருப்பிச் செலுத்துவதில் இரண்டு வருட கால அவகாசத்துடன், இலங்கையின் நிதிச் சிக்கல்களைத் தணிக்க சீனா முன்வைத்துள்ள கருத்து இலங்கையையும் உலக சமூகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது
எனினும் இந்தியா, ஜப்பான் போன்ற கடன் கொடுனர்கள் 10 வருடகால கடன் இரத்தையும் 15 வருடக்கால மறுசீரமைப்பையும் வழங்கியுள்ளனர்.
குறிப்பாகச் சீனாவிடம் கடனைப் பெற்றுள்ள ஆபிரிக்க நாடுகள், தமது
அச்சத்தை வெளியிட்டுள்ளதாக ஏ.என்.ஐ செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
இலங்கையில் ராஜபக்ச குடும்பத்தினால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி மற்றும் ஆட்சிக் கவிழ்ப்பு என்பன ஆபிரிக்க நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவுக்குச் செலுத்த வேண்டிய பணம்
இலங்கையைத் தளமாகக் கொண்ட டெய்லி பைனான்சியல் டைம்ஸின் கூற்றுப்படி,
சீன எக்ஸிம் வங்கியின் நிலுவையில் உள்ள கடன் 4,023 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மாத்திரமே. எனினும், இலங்கை மேலும் 3,000 மில்லியன் அமெரிக்க டொலர்களை சீனாவுக்குச் செலுத்த வேண்டியுள்ளது, இதில் 2,950 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சீனா டெவலப்மென்ட் வங்கிக்குச் செலுத்தவேண்டியுள்ளது.
இலங்கையின் பொருளாதார நெருக்கடி நேபாளம், பங்களாதேஷ், மாலத்தீவு மற்றும் மியன்மார் மற்றும் பல ஆபிரிக்க நாடுகளுக்கு ஒரு பாடமாகும்.
சீனாவைப் பொறுத்தவரை, பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் செல்வாக்கை விரிவுபடுத்துவதற்கான அதன் பாட்டுப்பாதை முயற்சிக்காகப் பல நாடுகளுக்கும் பரியக் கடன்களை வழங்கியுள்ளது.
ஆபிரிக்க நாடுகளுக்கான கடன்
2012ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை, ஆபிரிக்காவில் உள்ள நாடுகளுக்குச் சீன கடன்கள் ஆண்டுக்கு 10 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.
இந்தநிலையில், குறைந்த வருமானம் கொண்ட 22 ஆபிரிக்க நாடுகள் ஏற்கனவே கடன் நெருக்கடியில் உள்ளன அல்லது கடன் நெருக்கடியில் அதிக ஆபத்தில் உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 2000 மற்றும் 2020க்கு இடையில் ஆபிரிக்காவின் மொத்த வெளிநாட்டுக் கடன் ஐந்து மடங்கு அதிகமாக அதிகரித்து 696 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது என்றும் ஏ.என்.ஐ. தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், ஆபிரிக்க நாடுகளுக்கான 'கடன் பொறியை' தாம் உருவாக்கியுள்ளதாகச்
சுமத்தப்படும் குற்றச்சாட்டைச் சீனா மறுத்துள்ளது.

Puzzle iq test: படத்தில் உள்ள காதல் ஜோடிகளில் யார் ஏலியன்? 5 விநாடிகளில் பதிலை கண்டுபிடிங்க Manithan

புது பாய்பிரென்ட் உடன் சமந்தா வெளியிட்ட ஸ்டில்கள்.. காதல் கிசுகிசுவுக்கு நடுவில் வைரலாகும் புகைப்படங்கள் Cineulagam
