சீனா தொடர்பில் ரணில் எடுத்துள்ள முக்கிய நடவடிக்கை
சீன உரக் கப்பல் விவகாரம் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு அதன் செயற்பாடுகளை முன்னெடுக்க வெளிவிவகார அமைச்சிடம் ஒப்படைக்கத் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சுடனும் சீனத் தூதுவருடனும் இது தொடர்பில் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
ராஜதந்திர முறுகல்
இரு நாடுகளின் நட்புறவுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பிரச்சினைக்கு தீர்வு காண்பதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நிலைப்பாடாகும்.
இதேவேளை சர்ச்சைக்குரிய சீன உர கப்பலுக்கு காரணமானவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து பணத்தை வசூலிக்க கணக்காய்வாளர் பரிந்துரை செய்துள்ளார்.
அமெரிக்க டொலர்
சேதன உரத்தை சீன நிறுவனத்திடம் இருந்து பெற்றுக்கொள்ள 69 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
